2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

குரங்குகளால் பயிர்ச்செய்கைகளுக்குப் பாதிப்பு

Kogilavani   / 2021 மார்ச் 24 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில், குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், தாம் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், தமது பயிர்ச்செய்கைகளுக்கு சேதம் விளைவிப்பதாகவும் இதனால் தமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். .

மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன், கினிகத்தேனை, லக்ஷபான, கிரிவன்னெல்ல, அம்பகமுவ ஆகிய பகுதிகளிலேயே, குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, குரங்குகளைப் பிடித்து வன பகுதியில் கொண்டுவிடுவதற்கு, சம்பந்தப்பட்டத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X