2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

குருதிக் கொடைக்கு அழைப்பு

Kogilavani   / 2021 மார்ச் 02 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராபி சிஹாப்தீன் 

இரத்தவங்கியில் இரத்த இருப்பை அதிகரிப்பதற்கு குருதிக்கொடை வழங்க அனைவரையும் முன்வருமாறு, கலகெதர பிரதேச செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கலகெதர பிரதேச செயலகம் இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. 

எதிர்வரும் 8ஆம் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பிரதேச செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் நீடித்துவரும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமையால், இரத்த வங்கிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  இதனைக் கருத்திற்கொண்டே பிரதேச செயலகம் இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X