Editorial / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா , மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் குளவி கொட்டியதில் ஒன்பது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண் தொழிலாளர்கள் அறுவரும் அடங்குகின்றனர். இந்த சம்பவம், புதன்கிழமை (01) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், தேயிலைச் செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து, கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் நால்வர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என்றும் ஐந்து பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago