Freelancer / 2024 டிசெம்பர் 28 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்னை - பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில், இன்று (28,) பகல் 2 மணியளவில், கொழுந்து மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள், குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிகள், அக்கரபத்தனை - மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரிய மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடொன்று கலைந்து, கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளர்கள் மீது, குளவிகள் தாக்கியுள்ளன.
மன்ராசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு பேரில் நால்வர் சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியதோடு, ஏனைய நான்கு பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.AN
5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago