2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

’கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும்’

Editorial   / 2020 மே 17 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

1,000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் உடன் வெளியேற வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின்   உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், 

உலக சந்தையில் தேயிலையின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. பெருந்தோட்டதுறையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் சம்பள விடயம்  தொடர்பில், கடந்த காலங்களில்  பல்வேறு தரப்பினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

தற்போது கொரோனா தாக்கம் காரணமாக ஏனைய நாடுகளிலிருந்து தேயிலையை கொண்டு வருவதில் சிக்கல் நிலை காணப்படுவதால்;, வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு இலங்கை தேயிலைக்கு  பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் தேயிலை விலையும் உயர்வடைந்துள்ளது.   
இந்த சூழ்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை ஏன் வழங்க முடியாது? என  பெரியசாமி பிரதீபன் கேள்வி எழுப்பினார்.

கூட்டு ஒப்பந்ததத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மக்களை அரசியல் இலாபத்திற்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை காட்டி கபட நாடகம் ஆடியதாக தான் காட்சியளிக்கின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்;சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சந்தா அறவிடுகின்றார்கள். அவ்வாறு சந்தா அறவிடும் தொழிற்சங்கங்கள் இந்த ஆயிரம் ரூபாயை வழங்க கம்பனிகளுக்கு அழுத்தத்தை பிரயோகித்தார்களா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .