2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கெட்டம்பே விஹாரைக்கு ஆபத்து

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

500 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கெட்டம்பே சைத்திய வளாகம் மகாவலி ஆற்றில் மூழ்கும் ஆபத்தில் இருப்பதாக கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த  வளாகத்தில் பல கட்டடங்களுக்கு  அருகில்  விரிசல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய தேரர், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிடின், வரலாற்று புனித பூமியின் ஒரு பகுதி மகாவலி ஆற்றுக்குள் மூழ்குவதைத் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு,  210 மில்லியன் ரூபாய் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கபடப்ட நிலையில், நிதி சிக்கல்கள் காரணமாக, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிவித்தல் கிடைத்ததையடுத்து விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் மகாவலி அமைச்சர் ரொஷான் ரணசிங்க, உரிய அதிகாரிகளுடன் கெட்டம்பே பகுதிக்கு விஜயம் செய்து, அங்குள்ள பாதுகாப்பற்ற நிலைமையை அவதானித்ததோடு, உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X