Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியலமைப்பு ஊடாக மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என்றும் அதனைவிடுத்து இனவாதிகளின் கொக்கரிப்புகளுக்கு அடிபணிந்து மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கக்கூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர், இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளா்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள், உண்பதற்காக மட்டுமே வாய்த்திறக்கவேண்டும்; அவர்களுக்கு ஒருபோதும் உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்ற மமதையில் செயற்படும் பேரினவாத அரசியல்வாதிகள், அரசமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக்கூட பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான சதித்திட்டங்களை தீட்டிவருகின்றனர் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் ஓர் அங்கமாகவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்றும் அம்முறைமை நீக்கப்படவேண்டும் என மீண்டும் கோஷமெழுப்ப ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
புதியதொரு அரசமைப்பு இயற்றப்படவுள்ள சூழ்நிலையில், மாகாணசபை முறைமைக்கு எதிராக அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் இனவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபை முறைமையை, புதிய அரசமைப்பின் ஊடாக பலவீனப்படுத்துவதற்கு, அரசாங்கம் முயல்கின்றதா என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது என்று தெரிவித்த அவர், மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்றும் மாகாணசபைகள் முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என தமிழ் பேசும் மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அவர்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக அரசாங்கம், திட்டமிட்ட அடிப்படையில் இனவாதிகளை களமிறங்கியுள்ளதா என்ற குள்வி எழுந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, மாகாணசபை முறைமையில் கூடிய விரைவில் அரசாங்கம் நடத்தவேண்டும் என்று கோரியுள்ள அவர், அதன்பின்னர் புதிய அரசியலமைப்பு ஊடாக மாகாணசபை முறைமையை பலப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2025