Kogilavani / 2021 மார்ச் 18 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொட்டகலை பொது சுகாதர பரிசோதகர் பிரிவில் ஆசிரியை ஒருவர் உட்பட மேலும் 10 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதுவரை கொட்டகலைப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மேற்படிப் பகுதியில், அண்மையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவர்களோடு தொடர்பைப் பேணியவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன் முடிவுகள் இன்று(18) வெளியானபோதே 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொட்டகலை கொமர்சல் பகுதியைச் சேர்ந்த ஐவருக்கும் டெரிகிளேயர், லோகி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஐவருக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026