2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கொட்டக்கலையில் 90 தொற்றாளர்கள்

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்து ஒருவருடமாகியுள்ள நிலையில், கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில், இதுவரையில் 90 கொரோனா ரைவஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று கொட்டக்கலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

கொட்டக்கலை பிரதேச பொதுசுகாதார பரிசோதக அதிகாரியூடாக சேகரிக்கப்பட்ட, இந்தத் தகவல், வெள்ளிக்கிழமை (26) உத்தியோகப்பூர்வமான பெற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,  இவ்வாறு தொற்றுக்குள்ளான 90 பேரில், 70 பேர், கொரோனா சிகிச்சை முகாம்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்றும் 20 பேர் மாத்திரம் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில், மூன்று பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் இதுவரையில் 130 குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சமீப காலமாக கொரோனா தொற்று பரவிவருவதாகவும் இப்பிரதேசத்தில் கொரோனா பரவல் தொடர்பாக ஆராய்ந்து உடனுக்குடன் அறிக்கையிட குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .