Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மே 02 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோழி தொடர்பிலான வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ஒருவர் மற்றொருவரின் அந்தரங்க பிரதேசத்தை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
மடுல்சீம- பிட்டமாருவ கிராமத்தில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, ஒருவரின் விந்தகத்தை வெட்டும் அளவுக்குச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம், நேற்று முன்தினம் (13) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வாய்த்தர்க்கம் நீண்டு, ஒருவர் மற்றையவரின் விந்தகத்தை வெட்டும் முயற்சிக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபருக்கு மற்றைய நபர் இரண்டு கோழிகளை வளர்ப்பதற்கு கொடுத்துள்ளதுடன் அதில் ஒரு கோழி காணாமல் போனமையால் இப்பிரச்சனை ஏற்பட்டதாக காயமடைந்தவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 41 வயதானவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைதுசெய்வற்கான விசாரணைகளை மடுல்சீம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். ( பாலித ஆரியவன்ஸ)
48 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago