Gavitha / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ , மு.இராமசந்திரன்
கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய மாகாணசபை தேர்தலின் காலத்தில், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கொழும்புக்குச் சென்றபோது, அவருடைய வாகனத்தை வழிமறைத்து அவருடைய போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தார்கள் என்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி ஒத்திவைத்த ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். ராமசாமிக்கு பிடியாணை பிறப்பித்தார்.
கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில், அமைச்சர் திகாம்பரத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொள்ளவுள்ளமையால், தன்னால் இன்றைய வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று தெரிவித்து, ஹட்டன் பொலிஸாரினூடாக, அமைச்சர் பழனி திகாம்பரம் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
வழக்கு விசாரணையின் போது மாகாண சபை உறுப்பினர் முத்தையா சாமசாமி நீதிமன்றத்துக்கு ஆஜராகாமையால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் அவர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு தரப்பு முறைப்பாடுகளையும் சமரசமாக நிறைவு செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago