2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

சாமிமலை ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும்

Kogilavani   / 2016 ஜூலை 07 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சுகாதார  அமைச்சின் கீழ் இயங்கிவரும் சாமிமலை ஆஸ்பத்திரியானது, அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், சாமிமலை பிரதேசத்தில் 26 தோட்டங்களும் 2 கிராமங்களும் உள்ளன. இங்கு வாழ்கின்ற  மக்கள், தமது அவசர மருத்துவ தேவைகளுக்கு சாமிமலை நகரிலுள்ள ஆஸ்பத்திரிக்கே வருகைத்தருகின்றனர். 

இந்த ஆஸ்பத்திரியானது முறையாக திறக்கப்படுவதில்லை. இங்கு, தாதியர் ஒருவரும் வைத்தியர் ஒருவரும் சேவையாற்றுகின்ற போதும் இவர்களிடமிருந்து முழுமையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இங்கு நோயாளர்களுக்கு வழங்குவதற்கான போதிய மருந்துகள் இல்லை. இதேவேளை, நோயாளிகள் அமரக்கூடிய கதிரை மற்றும் ஏனைய வசதிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கு நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என அவர் கோரினார்.

இவ்விடயம் தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .