2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சிறுத்தையின் உடலம் மீட்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன் ரஞ்சித் ராஜபக்ஷ

மிருகங்களை வேட்டையாடுவதற்காக போட்டப்பட்டிருந்த வலையில் சிக்கி, சிறுத்தை ஒன்று உயிரழிந்துள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெய்ட்ரீ தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து  4அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்ட சிறுத்தையின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.  பொலிஸார் நேற்று மாலைல 3 மணியளவில் மீட்டுள்ளனர்.  

சிறுத்தையின் தலைப்பகுதி வலையில் மாட்டிகொண்டதனால் அது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். சிறுத்தையின் உடல் நல்லதண்ணி வன ஜிவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .