Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
நோட்டன், ஒஸ்போன் மிட்போட் தோட்டத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொழிலாளர்கள் வழமைபோன்று தேயிலை மலையில் தொழில்புரிந்து கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த சிறுத்தையொன்று இவர்களை தாக்க முற்பட்டுள்ளது. சிறுத்தையின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக தொழிலாளர்கள் சிறுத்தையை மடக்கிப் பிடித்து தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் சிறுத்தை உயிரிழந்துள்ளது.
இதேவேளை, சிறுத்தையின் தாக்குதலில் காயமடைந்த மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த சன்முகநாதன் (வயது 28) என்பவர் ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago