Kogilavani / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன்
'நுவரெலியா வசந்தகால களியாட்ட நிகழ்வுகளின் போது, சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துக்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தெரிவித்தார்.
இதுதொடர்பாக பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, குடிநீர் வசதிகள் உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் வசந்த காலத்துக்காக நுவரெலியாவுக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள், குப்பைகளை பொது இடங்களில் போடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரினார்.
சூழல் விதிகளை மீறி நடப்பவர்;களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றம் வரை கொண்டுச் சென்று தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே, சூழல் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
'வசந்தகால களியாட்ட நிகழ்வுகளையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் ரவீந்திர தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago