Kogilavani / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கண்டி, அஸ்கிரிய மஹா விகாரைக்குச் சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடம், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய புதன்கிழமை இடிக்கப்பட்டது.
அஸ்கிரிய விகாரைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாகக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறி கண்டி மாநகர சபை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கண்டி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது மேற்படி கட்டடத்தை அகற்றுவதற்காகன அனுமதியை கண்டி பிரதான நீதவான் பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேற்படி கட்டடத்தை இடிப்பதற்காக கண்டி பொலிஸார் அங்குச் சென்றபோது, தேரர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எதிர்ப்புக்கு மத்தியிலும் இக்கட்டடம் இடித்துடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago