2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது

Kogilavani   / 2021 மார்ச் 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் ஓயாவுக்குச் செல்லும் கிளை ஆற்றில், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேரை வட்டவளை பொலிஸார், நேற்று (19) இரவு கைதுசெய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்படி இடத்துக்குச் சென்றபோதே, பொலிஸார் மேற்படி 9 பேரையும் கைதுசெய்துள்ளதுடன் மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தியப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

குறத்த 9 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X