2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

‘சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றவும்’

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை நகரை ஊடறுத்து ஓடும் தொரவல ஆற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டடங்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாக, இந்நகரத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 19ஆம் திகதி, பலாங்கொடையில் ஏற்பட்ட திடீர்  வெள்ளத்துக்கும் இதுவே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பலாங்கொடை நகரை ஊடறுத்துச் செல்லும் தொரவல ஆற்றைப் இடைமறிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டடங்கள், சிறிய பாலங்கள் ஆகியவற்றை, முழுமையாக நீக்கவும் ஆற்றின் ஓரங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்கும் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .