Editorial / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர் என். பரமேஸ்வரன் தலைமையில், 2025-ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று, பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று (09) மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் நிலையச் சந்தியிலிருந்து இந்த வரவேற்பு ஊர்வலம் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள 26 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய முழக்கங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிகழ்வில், எஸ். எஸ். புஷ்பகுமார – மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வலயக் கல்வி அதிகாரிகள் – ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை, முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

குறித்த ஊர்வலமானது பாடசாலையின் பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும், அங்கு கௌரவிப்பு விழா இனிதே ஆரம்பமானது. இதன்போது, உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் மஸ்கெலியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்ன.
தமது கடின உழைப்பால் பல்கலைக்கழகக் கனவை நனவாக்கியுள்ள இந்த மாணவர்களின் சாதனையை, ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா நிருபர்.
45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
5 hours ago