Gavitha / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
சப்ரகமுவ மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 724ஆக அதிகித்துள்ளது என, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கண்ணங்கர, நேற்று (07) தெரிவித்தார்.
இம்மாகாணத்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் நிலவரம் குறித்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில், 397 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் 367 பேர் கேகாலை மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள அனைவரும் திவுரும்பிட்டிய ஆடைத்தொழிற்சாலை மற்றும் சீதாவாக்க தொழிற்பேட்டை ஆகிய கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த ஐந்து நாள்களில் மாத்திரம், 126 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 98 பேர் எஹெலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026