Kogilavani / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
'பல்வேறு சவால்களுக்குப் பின்னர் 8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்' என மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் பொதுச்செயலாளர் ஜுவன் இராஜேந்தினர் தெரிவித்தார்.
'மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அவர் வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லாது மலையக வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'இதுவரை காலமும் அரசாங்கத்துக்கு வெளியே இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான அழுத்தத்தை ஏற்ப்படுத்தியவர்கள் இன்று அரசாங்கத்தின் உள்ளே இருந்து அழுத்தத்தை கொடுக்க கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களுக்காக மட்டும் குரல் கொடுப்பவர் என பெரும்பான்மை மக்களை தவறாக எண்ணி விடக்கூடாது. அவர் நன்றாக படித்தவர், அரசியல் முதிர்ச்சி உள்ளவர் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்தவர்.
பல அமைப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிரக் கட்சி தலைவர் சம்பந்தன் அனைத்து மக்களது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப முழு நாட்டு மக்களின் நலன் கருதி செயற்படுவார்' என குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .