Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லபுக்கலை தோட்டத் தொழிலாளர்கள், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நுவரெலியா- கண்டி பிரதான வீதியில் லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்குள் முன்பாக, இன்று (20) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் லபுக்கலை தோட்டத்துக்கு உட்பட்ட லபுக்கலை கீழ் பிரிவு, மேற் பிரிவு , கொண்டக்கலை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தாம் தினமும் உழைக்கும் உழைப்புக்கு ஊதியமாக ஆயிரம் ரூபாயை வழங்கு என முதலாளிமார் சம்மேளனத்துக்கும், ஆயிரம் ரூபாயை பெற்றுகொடு என கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் முகமாகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.செந்தில் குமார் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago