Kogilavani / 2021 மார்ச் 26 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
சம்பள நிர்ணய சபையிலிருந்து வெளியேறி தொழிற்சங்கங்கள் கூட்டடொப்பந்தத்தை முன்னெடுக்க விரும்பினால், அது தொடர்பில் தமக்கு ஆட்சோபனை இல்லை என்று, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
நானுஓயா இரதல்ல விளையாட்டு மைதானத்தில், இன்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த அவர், வத்தமானியில் வெளியானதற்கமைய ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்குவதில் தமக்குப் பிரச்சினை இல்லை என்றும் ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகள், தனியார் தேயிலைத் துறையினர் உட்பட பலர், நிவாரணம் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவது தொடர்பிலும் புதிய தொழில்முறை தொடர்பிலும் திட்டமொன்றை சம்ர்ப்பித்ததாகவும் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது தொழிற்சங்கங்கள், சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளமையால் கூட்டொப்பந்தத்திலிருந்து தாம் விலகி விட்டதாகவும் இதனால் சட்ட ரீதியாக தொழிலாளர்களுக்கான சலுகைகளை செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
'ஆனாலும் தொழிலாளர்களையும் தோட்ட உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொண்டு, தொழிற்றுறையை சில வழிமுறைகளோடு கொண்டு நடத்துவோம்.
ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்வு என்பது, 100க்கு100 சதவீத சம்பள உயர்வாகும் மீண்டும் தொழிற்சங்கங்கள் கூட்டொப்பந்தத்தை முன்னெடுக்க விரும்பினால், சம்பள நிர்ணய சபையிலிருந்து விலகி வரவேண்டும். அவ்வாறு விலகி வந்தால் அது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை' என்றார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago