Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை, இனி மாற்றி அமைக்க முடியாதென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன் செயலாளர் லலித் ஒபேசேகர விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் துறையினருக்குப் புதிய சம்பளத்தொகையை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் தற்போது செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள், தொழிற்சங்கங்களுக்கு இடையில், கடந்த மாதம் 28ஆம் திகதி, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில், 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன், 50 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவையும் சேர்த்து, மொத்தச் சம்பளமாக 750 ரூபாய் வழங்கப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இந்தத் தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து, தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பெருந்தோட்டத் துறையினருக்குப் புதிய சம்பளத்தொகையை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் தற்போது செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை என லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago