2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சர்வமத பிரார்த்தனை

Kogilavani   / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

டயகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரோஷன் அபேகோன் தலைமையில், இன்று (01) மாலை 7 மணிக்கு, டயகமை சிங்கள மகா வித்தியாலயத்தில் சர்வமதப் பிரார்த்தனை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சர்வமத பிரார்த்தனையின் போது தர்ம போதனைகள் இடம்பெறவுள்ளதுடன் நாளை (02) விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன. மேலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .