2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சிசுவைப் புதைத்த தாய் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

தனக்கு பிறந்த சிசுவொன்றை வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எஹலியகொட, அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவர் தற்போது எஹலியகொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கெனவே திருமணமான இப்பெண், கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்​ வேறொரு நபரின் உதவியுடனேயே இந்த சிசுவை தோட்டத்தில் புதைத்ததாகவும், கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .