Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான், ஆ.ரமேஸ்
தலவாக்கலை- லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னராணிவத்தை தோட்டத்தில் நேற்று முன்தினம்(16) மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியது.
இதன் போது வீட்டிலிருந்த பெறுமதி மிக்க சொத்துக்களும் தீயில் எரிந்து கருகியுள்ளன.
தீபரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணையை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வரும் நிலையில், இந்த தீ விபத்தை அறிந்து அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர், இராமன் கோபால் மற்றும் இ.தொ.கா உப தலைவர் சச்சிதானந்தன் ஆகியோர் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டனர்.
அத்துடன் தீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உடனடியாக தற்காலிக வீடு ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், தோட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .