2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சிறுத்தையின் உடலம் மீட்பு

Kogilavani   / 2021 மார்ச் 04 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இராகலை சென்லெனாட்ஸ் தேயிலை மலையிலிருந்து சிறுத்தையின் உடலமொன்று, இன்று (4) காலை மீட்கப்பட்டதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். 

சுமார் 4 அடி நீளமான சிறுத்தையின் உடலமே மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளிடம் சிறுத்தையில் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை, எஸ்டபோட், சூரியகாந்தி, சென்லெனாட்ஸ் ஆகிய தோட்டப் பகுதிகளில், இரவு வேளைகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X