2026 மே 04, திங்கட்கிழமை

சிவ​னொளிபாதமலையில் தவறவிடப்பட்ட பணம் உரியவரிடம் கையளிக்கப்பட்டது

செ.தி.பெருமாள்   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலைக்குக்கு யாத்திரை மேற்கொண்ட ஒருவர் தவறவிட்ட 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், நல்லதண்ணி பொலிஸாரால், அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

தியகம்பர - கெட்டகதெனிய பகுதியைச் சேர்ந்த நபரொருவர், சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டுவிட்டு, நல்லதண்ணி - கங்குலதென்ன பகுதியிலுள்ள ஓய்வறையில் தங்கியிருந்த போது, தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார். 

இதனையடுத்து, ஓய்வறையின் அதிகாரியொருவர், குறித்த பணப்பையைக் கண்டெடுத்து நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து, பணத்தைப் பொலிஸார், உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .