Kogilavani / 2021 மார்ச் 30 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், டி.சந்ரு
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா நாவலர் கல்லூரி, நாவலர் ஆரப்பப் பிரிவு பாடசாலை ஆகியவற்றிக்கு, கொரோனா ஒழிப்புக்கான சுகாதார பொருட்களை, பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், நேற்று முன்தினம் (30) வழங்கினார்.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைவாக, மேற்படி சுகாதார பொருட்கள், பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இப்பாடசாலையில் முன்னெடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த தவிசாளர், பாடசாலைக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படுமாயின் அதற்கான நடவடிக்கைகளை பிரதேச சபை காலம் தாழ்த்தாது முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலைகளுக்கு மிக அவசரமாக தேவைப்பட்ட கொரோனா தொற்று நீக்கிகளையும் வெப்பமானிகளையும் தவிசாளர் வழங்கினார்.


6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago