Gavitha / 2021 மார்ச் 01 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தலவாக்கலை - சென்.கிளயார் வனப்பகுதியில், நேற்று (28) இரவு ஏற்பட்ட தீப்பரவலால், சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
இந்தத் தீப் பரவல் ஆரம்பித்ததை அடுத்து, தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர், பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும் வரட்சியுடனான வாநிலை நிலவி வருகின்றமையால், தீ வேகமாக பரவி, 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கரையானது என, பொலிஸார் தெரிவித்தனர்.
மனித செயற்பாடு காரணமாகவே, இந்தத் தீப் பரவல் எற்பட்டிருக்கும் எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026