2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

செயலமர்வு...

Kogilavani   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்   

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு, தமிழ் பாடசாலைகளில் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத் திட்ட நடைமுறைகள் தொடர்பாக, தரம் 4 ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, மடவலை மதீனா தேசிய கல்லூரியில், திங்கட்கிழமை (10) முதல் நடைபெற்று வருகிறது.  

வத்தேகம கல்வி வலயத்தால் நடத்தப்படும் இந்தச் செயலமர்வில், குறித்த கல்வி வலயப் பாடசாலைகளைச் சேர்ந்த 36 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.  

செயலமர்வில், வத்தேகம கல்வி வலயத்தின் உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி பாருக் உடையார், ஆசிரியர் ஆலோசகர்களான திருமதி ஜி.இராஜேஸ்வரி, திருமதி ஈஸ்வரி மற்றும் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு, செயலமர்வுகளை நடத்தி வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X