Editorial / 2021 ஜூன் 21 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எம்.கிருஸ்ணா
பயணக்கட்டுப்பாடுகள் சட்டத்தை மீறி, விருந்துபசாரம் நடத்திய குற்றச்சாட்டில், நேற்று (20) மாலை கைது செய்யப்பட்ட தலவாக்கலை- லிந்துலை நகர சபையின் தவிசாளர் பி.பாரதிதாஸன் உள்ளிட் ஏழுபேர், பொலிஸ் பிணையில் இன்று (21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட ஏனைய அறுவரும், வர்த்தகர்கள் என தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், பொலிஸ் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட அனைவரையும் ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர்.
தவிசாளர், தனக்கு வேண்டிய சிலரை அழைத்துக்கொண்டு, தலவாக்கலை மேல் கொத்தமலை நீர்த்தேகம் அமைந்திருக்கும் மலையின் உச்சிலுள்ள தனிப்பட்ட உற்சவ மண்டபத்தில், இவ்வாறு விருந்துபசாரம் வழங்குகின்றார் என 119 என்ற அவசர இலக்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்தே, பொலிஸ் அவ்விடத்தை சுற்றிவளைத்துள்ளனர். அவ்விடத்துக்கு பொலிஸ், வருவதை அவதானித்த இன்னும் சிலர், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அந்த விருந்துபசாரத்துக்கு தவிசாளர் வருகைதந்ததாகக் கூறப்படும் நகர சபைக்குச் சொந்தமான வாகனமும் கைப்பற்றப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டவரப்பட்டுள்ளது.
சேவலை சின்னமாகக் கொண்ட, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினராக அவர் இருந்தாலும், ஆதரவாளர்கள் சிலரை தம்பக்கம் இழுத்து, தனக்கு மட்டுமே ஆதரவளிக்கும் வகையில் அவர்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன
சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தலைமையிலானோர் மேற்கொண்டனர்.







அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .