சிவாணி ஸ்ரீ / 2020 மே 05 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ மாகாணத்தில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக சப்ரகமுவ மாகாண நிர்மாண அபிவிருத்தி, இயந்திர உபகரண அதிகார சபை தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் நிலாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இரத்தினபுரி, பெரடைஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண நிர்மான அபிவிருத்தி, இயந்திர உபகரண அதிகார சபையில் நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து சப்ரகமுவ மாகாணத்தில் மக்களை பாதுகாப்பதற்கென சப்ரகமுவ மாகாண வைத்தியசாலைகள், மாகாண சுகாதார திணைக்களம், அரச நிறுவனங்களுக்கு என்பவற்க்கு தேவையான அனைத்து பணிகளும் மாகாண நிர்மான அபிவிருத்தி மற்றும் இயந்திர உபகரண அதிகார சபையின் மூலம் மேற்கொண்டு வருகின்றது என்று அவர் கூறினார்.
குறிப்பாக எமது இயந்தி அதிகார சபையின் மூலம் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பழுதடைந்த அம்புலன்ஸ் வண்டிகளை திருத்தி அமைத்து குறித்த நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தல், வைத்தியசாலைகளில் பழுதடைந்த கட்டடத்தொகுதிகள், கட்டில்கள் உள்ளிட்ட பழுதடைந்த தளவாளடப் பொருள்களை், மாகாணத்தின் சுகாதார திணைக்களம், அரச நிறுவனங்களில் பழுதடைந்த வாகனங்கள், தளபாட பொருட்கள என்பன பொது மக்களின் தேவைகளுக்காக திருத்தி அமைத்து கொடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
இந்நிலையில், தங்களது சேவை, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அதில் எந்தவொரு தாமதமும் ஏற்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
58 minute ago
1 hours ago