Kogilavani / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
டிக்கோயா தபாற் காரியாலயத்தில், 35 வருடங்களாக தபால் விநியோகஸ்தராகக் கடமையாற்றி சேவையிலிருந்து ஓய்வுபெற்ற உடுகொட முதியான்சலாகே பிரேமரட்ணவுக்கு, சேவை நலன் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
டிக்கோயா நுண்கலை கல்லூரி அதிபர் எம். மூவேந்தன் தலைமையில், நேற்று (31) பாராட்டு விழா இடம்பெற்றது.
இவர் தனது சேவை காலத்தில், கடிதங்களை உரிய நேரத்தில் விநியோகம் செய்து தனது கடமையை சிறப்பாக முன்னெடுத்தார் என இதன்போது நினைவுக்கூரப்பட்டது.
அத்துடன் அவர் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago