2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சொந்த ஊருக்கு வந்துள்ளவர்கள் பற்றி பிரதமருடன் சதாசிவம் பேச்சு

Editorial   / 2020 மே 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொழும்பில் இருந்து தங்களது வேலைகளை இழந்து சொந்த ஊருக்கு வந்துள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது தொடர்பாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

ஹட்டனில், நேற்று (06) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

வேலைகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்கள், தோட்டங்களில் வேலை செய்ய விரும்பினால், அவர்களின் பெயர்கள் பதியப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் இது தொடர்பில் பிரதமருடனும் பெருந்தோட்டக் கைத்தொழிழல் அமைச்சருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பல தோட்டங்களில் காடாகக் காணப்படும் தரிசு நிலங்களை இவர்களுக்கி, விவசாயத்தை ஊக்குவிக்கலாம் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், அந்த நிலங்களில், மீண்டும் தேயிலையை பயிரிடலாம் என்றும் அவர் கூறினார்.

இது, எதிர்காலத்தில் சிறந்த தேயிலை உற்பத்திக்கு வழிசமைக்கும் என்றும் தேயிலைத் தொழிலையும் தோட்டங்களையும் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை, தொழிலாளர்கள் மத்தியிலும் ஏற்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

எந்தவொரு சுகாதார பாதுகாப்பும் இன்றியே, தோட்டத் தொழிலளார்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறிய அவர், வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கொத்தமல்லி தண்ணீர், சுக்கு தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்ட நிலையில், அத்திட்டம் பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .