2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஜப்பானைப் பின்பற்றி மலையகத்தில் மரக்கறி உற்பத்தி

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஜப்பானில் மரக்கறி உற்பத்திக்காக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைத் திட்ட  முறையினை இந்நாட்டு விவசாயத்திற்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய ஒன்றிய சபையின் திரு.அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்து உரம் மற்றும் இரசாயனப் பற்றாக்குறையை விவசாயிகள் எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையிலேயே இந்த புதிய திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 என​வே எதிர்வரும் நாட்களில் ஜப்பானின் பசுமைத் திட்ட  பயிர்ச்செய்கை முறையை அறிமுகப்படுத்துவதற்கு தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

 இம்முறையின் மூலம், தற்போது காய்கறிகள் பயிரிட செலவிடப்படும் உரத்தின் அளவை பாதியாக குறைக்க முடியும் என்பதுடன், இந்த முறையை அமல்படுத்தினால், விவசாயிகளின் பல பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .