Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2020 நவம்பர் 08 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் 46 ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஷ் ஆகியோருக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அமெரிக்க வரலாற்றில் பல தசாப்தங்களின் பின், அதிக வாக்களிப்பு விகிதத்தைக் கண்ட தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கும் உபஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹரிஸுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி, மதசார்பற்ற, சிறுபான்மையினத்தவர்களையும் அரவணைத்து பயணிக்ககூடிய ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago