சிவாணி ஸ்ரீ / 2020 மே 12 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
காவத்தை, அவுப்பைத் தோட்டத்துக்குச் சொந்தமான டெக்டர் ரக வாகனமொன்று, அவுப்பை தோட்ட வீதியில் இருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், டெக்டர் வாகனத்தி சாரதி, உயிரிழந்துள்ளார்.
இன்று (12) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காவத்தை உடா அவுப்பை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரணசிங்க ஆராச்சிலாகே பத்மகுமார எனும் 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அவுப்பை தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து சாரதி உள்ளிட்ட மேலும் இரண்டு தொழிலாளர்களுடன், உரம் ஏற்றிக் கொண்டு சென்றபோது, அவுப்பை -தலுகலை பிரதான வீதியிலிருந்து சிறிய வீதி ஒன்றுக்குள் நுழைவதற்கு முயன்றபோதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டெக்டர் பள்ளத்துக்குச் செல்ல ஆரம்பித்தவுடன், அதில் இருந்த இருவர் தப்பித்துக்கொண்டதாகவும் எனினும் சாரதி மாத்திரம் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
13 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
58 minute ago
3 hours ago