Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு. புஷ்பராஜ், சுஜிதா
ஹோல்புறூக் பிரதேசத்தில் உள்ள கொலனி மற்றும் நகரப்பகுதிகளில், டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு அப்பகுதியை சிரமதானப் பணியின் மூலம் துப்புரவு செய்யும் பணி, நேற்று (29) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சீட்டி தொழிற்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
இதேவேளை, தலவாக்கலை பாரதி மகா வித்தியால மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புடன், கடந்த 3 தினங்களிலும் கல்வி அமைச்சின் பணிப்புக்கமைய, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்ய, நுவரெலியா வலயக் கல்வி காரியாலயத்தில் இருந்து அதிகாரிகள் வருகை தந்து வேலைத் திட்டம் தொடர்பாக அறிக்கையைப் பதிவு செய்து கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .