Kogilavani / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச
பதுளை, கலன்வத்தையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துனர் (வயது 26)ஒருவர் புதன்கிழமை (23) இரவு தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் வந்த நால்வரே மேற்படி நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவரிடமிருந்து 4,947 ரூபாய் பணத்தையும் அலைபேசியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
பெரெட்டுப்பொல என்ற இடத்தில் வைத்து வழிவிட்டுச் செல்லாமை தொடர்பில், ஏற்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணமென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியையும் மதுபான போத்தலொன்றையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago