2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

தாய் மற்றும் மகள் மீது அசிட் வீச்சு

Sudharshini   / 2016 ஜனவரி 06 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை, அம்பகாகும்புர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இளம் தாதி  ஒருவர் மீதும் அவரது தாயார் மீதும், அசிட் திரவகத்தை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாதியும் அவரது தாயாரும், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டி வைத்தியசாலையில் சேவை புரியும் மேற்படி தாதி,  அம்பகாகும்புரையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை (05) மாலை, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள முகமூடி அணிந்த இருவர், தாதி மீதும் அவரது தாயார் மீதும் அசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மேற்படி, சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .