Kogilavani / 2017 மே 05 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன குழுவினர், தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, எதிர்காலத்தில் தேயிலை ஆராய்ச்சியில் ஈடுபட இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவதற்காக, சீன நாட்டின் விவசாய பிரதி அமைச்சர் சென் க்ஸியோவா (Chen xiaohua) உள்ளிட்ட குழுவினர், ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு, நேற்று விஜயம் மேற்கொண்டனர்
இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க மேற்கொண்டிருந்தார். இக்குழுவினருடன் அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் வந்திருந்தார்.
இலங்கையில் தேயிலை உற்பத்தி முறைமைகள் தொடர்பிலும் தேயிலை தூள் உற்பத்தி தொடர்பிலும் மேற்படிக் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இக்குழுவினர் நுவரெலியா, லபுக்கலை தேயிலை தொழிற்சாலை மற்றும் தலாவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையம் என்பவற்றுக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு விஜயத்தை மேற்கொண்ட கொண்ட அவர்கள், அங்கு ஆய்வுகளை நடத்தியதன் பின்னர், ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் டொக்கடர் கவரம்மானவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலின் பின்னரே, சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, ஆய்வுகளை நடத்துவதற்கு மேற்படி குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இவர்களது விஜயத்தின் பின்னர், தேயிலை உற்பத்தி முறைமையை நவீனமயப்படுத்தல் மற்றும் இலங்கை தேயிலையை சீன நாட்டுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.





4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026