Princiya Dixci / 2017 மே 03 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேயிலையின் அரும்புகளை உடனடியாக வளர செய்யவதற்காக, ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பகுப்பாய்வுக் கருவிகள் அறிமுகப்படுத்துவதற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பானின் கவசாகி கிகோ வரையறுக்கப்பட்ட கம்பனி ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளன.
மீளாய்வை மேற்கொள்வது தொடர்பில், குறித்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்கவினால் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், இக் கருவிகளை அறிமுகப்படுத்துவதற்காக துல்லியத்தன்மையினை உறுதிப்படுத்தும் மீளாய்வொன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026