Kogilavani / 2016 ஜனவரி 03 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பாதுளை, ஹாலி-எல பகுதியிலுள்ள வீடொன்றில் 28,000 ரூபாய் பணத்தையும் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய திறன்பேசியையும் திருடியதாகக் கூறப்படும் மூன்று சிறுவர்களை பதுளை பொலிஸார் சனிக்கிழமை(2) கைதுசெய்துள்ளனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 11, 13, 14 வயதுடைய சிறுவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான திறன்பேசி மற்றும் திருடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 5 அலைபேசிகளையும் எஞ்சிய 6 ஆயிரம் ரூபாயையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்படி சிறுவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago