Sudharshini / 2016 ஜனவரி 04 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
படல்கும்புற பகுதியிலுள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாயை திருடிச் சென்ற திருடனை, அங்கிருந்த சி.சி.டி.வி கெமரா காட்டிக்கொடுத்துள்ளது.
படல்கும்புற நகரின் மொத்த விற்பனை வர்த்தக மத்திய நிலையமொன்று, 2ஆம் திகதி இரவு உடைக்கப்பட்டு அங்கிருந்து இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணம் திருடிச் செல்லப்பட்டிருந்தது.
மறுநாள் வர்த்தக மத்திய நிலையத்துக்கு வந்த உரிமையாளர், சி.சி.டி.வி கெமராவை சோதித்து பார்த்த போது, பணம் திருடிச் செல்லப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இதைனையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (03) அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருட்டினை மேற்கொண்டவர் இனங்காணப்பட்டுள்ள போதிலும், அந்நபர் தலைமறைவாகியிருப்பதனால் அவரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில், படல்கும்புற பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago