Kogilavani / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ்
நோர்வூட், வெஞ்சர் தேயிலை தொழிற்சாலை தோட்டத்தில், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவினால் திங்கட்கிழமை(11), திரைநீக்கம் செய்யப்பட்ட நினைவுப்படிகம் இனந்தெரியாத நபர்களால் அன்றிரவே உடைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டங்கள் மற்றும் கிராமபுறங்களில் மக்கள் பாவனைக்குதவாத நிலையிலுள்ள வீதிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்துக்கு அமைய, தோட்ட வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கென அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல 728 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வீதி அபிவிருத்திக்கான ஆரம்பப் பணிகள், திங்கட்கிழமை பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டதுடன் நினைவுப்படிகங்களும்; திரைநீக்கம் செய்யப்பட்டன. இவ்வாறு நோர்வூட் பகுதியில் திரைநீக்கம் செய்யப்பட்ட நினைவுப்படிகமே உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago