2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

திருமண வீட்டில் கைக்குண்டு தாக்குதல்

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா                  

திருமண நிகழ்வு நடைபெற்ற வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுங்காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், நேற்று இரவு மகியங்கனையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இருந்த வீடொன்றில் திருமணமொன்று நடைபெற்றது. இதன்போது, மணமக்கள் மற்றும் உறவினர்கள் இருந்த வீட்டின் மீது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் 64 வயது நிரம்பிய நுவன்திய ராஜபக்ச என்ற நபர், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவரும் படுங்காயங்களுக்குள்ளானார்.

படுகாயமடைந்த பெண், மகியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைக்குண்டு வீச்சி தாக்குதலில் பலியான நபரின் சடலம், சட்ட வைத்திய பரிசோதனைக்கென, மகியங்கனை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பகுதியிலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை, மகியங்கனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனிப்பட்ட குரோதமே, இக்கைக்குண்டு வீச்சி தாக்குதலுக்கு காரணமென்று, விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .