2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Sudharshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா மகேஸ்வரி

இரத்தினபுரி, அப்புகஸ்தென்ன , மூக்குவத்தை தோட்டத்தில் தீ விபத்தினால் வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணியுடன் வீடுகளை விரைவில் நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன  பரணவித்தான தெரிவித்தார்.

மலையக மக்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை ஞாயிற்றுக்கிழமை (20) நேரில் சென்று பார்த்த போதே அவர் இதனை கூறினார். இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் அவர்   வழங்கி வைத்தார்.

இப்பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 07 வீடுகள் சேதமடைந்ததுடன் 07 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது உறவினர்கள், நண்பர்களது வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .