2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண பிரதான செயலகத்தின் கீழ் இயங்கி வரும் மேற்படி தகவல் தொழிநுட்பப் பிரிவுக்கு, மேலும் இரு தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தலைமையில், மாகாண சபைக் கட்டடத்தில், நேற்று முன்தினம் (12) நடைபெற்றது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ஹேரத்.பி.குலரத்ன, மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளார் சுனேத்ரா குணவர்தன, ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் ருக்மணி ஆரியரத்ன மற்றும் நியமனம் பெற்ற தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளான சரித புஞ்சிநிலமே, ஜனக குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X